வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America) ஆண்டுவிழா வழமைபோல ஜூலை மாதம் மிசெளரி மாநிலத்தின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு முதல்முறையாகத் தமிழ் குறும்படப் போட்டிகளை அறிவித்துள்ளது. தமிழர் வாழ்வியல் மற்றும் சமூகச் சூழலைப் பேசுகிற சிறந்த 10 குறும்படங்களை உலகமுழுதிலும் இருந்து தெரிவுசெய்து விருது மற்றும் பரிசு வழங்கப்படும்.
ஆர்வமுள்ள குறும்பட இயக்குனர்கள் முதலில் இந்த இணைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும்: http://www.fetna2014.com/entry-forms/short-film-contest-entry.html
பிறகு குறும்படத்தைக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். Thulir Software Technologies, No.368, Padmavathy Street, Srinivasa Nagar, Madipakkam, Chennai 600091, Tamilnadu, INDIA. முதல் பரிசு: இரண்டு படங்களுக்குத் தலா $500. இரண்டாவது பரிசு: மூன்று படங்களுக்குத் தலா $200. மூன்றாவது பரிசு: 5 படங்களுக்குத் தலா $100.
பரிசுபெறும் படங்கள் ஜூலை மாதம் செயின்ட் லூயிசில் நடக்கவிருக்கும் ஃபெட்னா தமிழ் விழாவில் திரையிடப்படும். விழாவில் நேரில் பங்கேற்க விரும்புவோர் சொந்தச் செலவில் வரலாம். போட்டிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.
மேலதிக விவரங்களுக்கு: மின்னஞ்சல் - shortfilmcontest@fetna.org வலையகம் - www.fetna2014.com/events/side-sessions/item/31-tamil-short-film-contest.html
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |