சிகாகோ: TNF ஆண்டு விழா ஏற்பாடுகள்
2014 மே 24-25 தேதிகளில் (Memorial Day week end) தமிழ்நாடு அறக்கட்டளையின் நாற்பதாவது ஆண்டு விழாவையும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் நாற்பத்தைந்தாவது ஆண்டு விழாவையும் முன்னிட்டு இரண்டுநாள் மாநாடு சிகாகோவில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அறக்கட்டளைத் தலைவர் திரு. அறவாழி, துணைத்தலைவர் சோமலெ. சோமசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் பத்மினி, முன்னாள் தலைவர் திரு. துக்காராம் போன்றோர் முந்தைய மாநாடுகளின் வெற்றி, பணிகளின் நோக்கம் மற்றும் சிறப்பு போன்ற பல அம்சங்களை எடுத்துரைத்தனர். சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் வீரா. வேணுகோபால், சிகாகோ மாநாட்டில் சேகரிக்கப்படும் நிதியினால் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பள்ளிகளில் 25% மட்டுமே 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களை, எப்படி சிறப்புப் பயிற்சியின் மூலம் மேம்படுத்தலாம், அவர்களின் படிப்பாற்றலை எப்படித் தூண்டலாம் என்பது குறித்த செயல்திட்டத்தை விளக்கினார்.

சங்கத் தலைவர் சோமு மாநாட்டின் செயல் திட்டத்தை விளக்கினார். லேனா தமிழ்வாணன், கவிஞர் ந. முத்துக்குமார், மகுடேஸ்வரன், தமிழச்சி தங்கபாண்டியன், மேகலா ராமமூர்த்தி, கலைஞர்கள் தீபக், அர்ச்சனா, மதுரை முத்து ஆகியோர் மாநாட்டுக்கு வரவிருப்பதை அறிவித்ததார். நடிகர் விவேக், நடிகர் செல் முருகன், மற்றும் பாடகர் கார்த்திக் தன் குழுவோடு வருவது, மேலும் உள்ளூர்க் கலைஞர்கள் ஆகியோரின் பங்கேற்புக் குறித்தும் விவரித்தார். சங்கத்தின் செயலாளர் திரு. மணிகண்டன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவெய்தியது.

ஆனந்தன்,
சிகாகோ

© TamilOnline.com