கம்பன் கழகம்


டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோகன், முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கித் தயாரிக்கும் படம் கம்பன் கழகம். இப்படத்தில் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி, கிருத்திகா, ஸ்வப்னா போன்ற புதுமுகங்கள் நாயக, நாயகிகளாக அறிமுகமாகின்றனர். ஒரு இளைஞன், நான்கு பேரை சந்தித்த தருணத்திலிருந்து, அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் படத்தின் கதை. இவர்களுடன் டெல்லி கணேஷ், சிங்கமுத்து, கிஷோர், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாம், பிரசன், பிரவீன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com