கொட்டிய தேனும் மொய்த்த ஈக்களும்
A jar of honey had overturned in a house. A large number of flies flocked to the spill.
ஒரு வீட்டிலிருந்த தேன் ஜாடி கவிழ்ந்து போனது. ஏராளமான ஈக்கள் கொட்டிய தேனை மொய்த்தன.

They planted their feet in the honey and ate it greedily. They enjoyed the taste so much that they smeared themselves in the honey.
தமது கால்களை நன்றாகத் தேனுக்குள் ஊன்றியபடி அவை தேனைக் குடித்தன. தேன்குடிக்கும் சந்தோஷத்தில் தம் மேலெல்லாம் தேனை வாரிப் பூசிக்கொண்டன.

In the end, they could not release themselves from the spread of honey and the choked.
இறுதியில், அவை பரவியிருந்த தேனிலிருந்து விடுபட்டுப் பறக்க முடியாமல் திணறின.

When they were dying, they lamented, "How foolish we are! When the going was good, we did not know where to stop. For that indiscretion, we are paying with our lives!"
இறக்கும் தறுவாயில், "நாம் எத்தனை மூடர்கள்! நல்லது நடக்கும்போது, அதை எத்துடன் நிறுத்திக் கொள்வது என்பது நமக்குத் தெரியவில்லை. அந்த விவேகமின்மைக்கு நமது உயிரை விலையாகக் கொடுக்கிறோம்" என்று புலம்பின.

Discretion in enjoyment leads to prolonged happiness.
கட்டுப்பாட்டுடன் துய்த்தால் மகிழ்ச்சி நீடிக்கும்.

© TamilOnline.com