'ஆச்சார்யா' என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள படத்தைத் தந்த ரவி, நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கும் படம் 'என்னதான் பேசுவதோ'. இதில் விஜய்ராம் நாயகனாக அறிமுகமாகின்றார். தக்ஷா நாயகியாக அறிமுகமாகிறார். தாஸ், ரோஷன் உள்ளிட்ட பல புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆதரவற்று வந்து சேரும் சிறுமியை ஒரு கிராமமே அன்போடு வளர்க்கிறது. அவ்வூர் இளைஞர்கள் சிலர் அந்தப் பெண்ணுக்கு நண்பர்களாகின்றனர். அவர்களில் ஒருவன்மீது அவளுக்குக் காதல். திடீரென பீகாரிலிருந்து வரும் கும்பல் ஒன்று அவளைக் கடத்திச் செல்கிறது. அப்போதுதான் அவள் யார் என்கிற அதிர்ச்சிப் பின்னணி தெரியவருகிறது. அவளை கிராமத்து இளைஞர்கள் மீட்டார்களா, காதல் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. கதை, திரைக்கதை எழுதி ரவி இயக்க, டி. இமான் இசையமைக்கிறார். உலகெங்கும் பெண்கள் மீதான வன்முறையும், கொடுமையும் அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் படம் இது.
அரவிந்த் |