சதுரங்க வேட்டை


நாளை', 'சக்கர வியூகம்' படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் நட்டு என்கிற நட்ராஜ் சுப்ரமணியன் நாயகனாக நடிக்கும் படம் 'சதுரங்க வேட்டை'. நாயகியாக இஷாரா நடிக்கிறார். எச். வினோத் இயக்குகிறார். "இயற்கையின் சமநிலை தவறினால் அழிவுதான். மனிதனின் சமநிலை தவறும்போது நடப்பதுதான் சதுரங்க வேட்டை. பணம் இருந்தால் ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம்; பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் நிலை இருக்கும்போது பணம் சம்பாதிக்கவும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறவனின் கதைதான் இது" என்கிறார் இயக்குநர். முக்கிய வேடங்களில் இளவரசு, பொன்வண்ணன், பிறைசூடன், தரணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நகைச்சுவை கலந்த சமூகப்படமாம் இது. நடிகர், இயக்குநர் மனோபாலா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com