13ம் பக்கம் பார்க்க


அது ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தில் வரும் 13ம் பக்கத்தை யாரும் திறக்கவோ பார்க்கவோ கூடாது. காரணம், அந்த 13ம் பக்கத்தில் ஒரு சாத்தான் ஒளிந்திருக்கிறான். அவன் எதேச்சையாக அதிலிருந்து வெளிவருகிறான். அவன் பண்ணும் அட்டகாசத்தை திகில் + நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது '13ம் பக்கம் பார்க்க'. படத்தில் ரத்தன் மெளலி, ராம் கார்த்திக், ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகை நளினி இப்படத்தில் "சுருட்டு சுடலை ஆச்சி" எனப்படும் அதி பயங்கர மந்திரவாதியாக வருகிறார். ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் வைப்பது என அவர் மந்திரவாதியாக வரும் காட்சிகள் திகிலாக இருக்கும் என்கிறார் கோலிவுட் கோவிந்து. புகழ்மணி, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com