யான்


ஜீவா நாயகனாக நடித்து வரும் படம் யான். நாயகியாக ராதாவின் மகள் துளசி நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் படத்தை இயக்குகிறார். ஆக்‌ஷன் கலந்த அடிதடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் சண்டைக் காட்சிக்களுக்காக ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் கலைஞர் முஸ்தபா டொகி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஆஸ்கர், கோல்டன் குளோப் உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com