காசு பணம் துட்டு
கஸ்தூரிராஜா மலையாளத்தில் இயக்கிவரும் படம் அசுரகுலம். தமிழில் சில மாற்றங்களுடன் அது 'காசு பணம் துட்டு' என்ற பெயரில் வெளியாக உள்ளது. நாயக, நாயகியாக மித்ரன், சானியா, சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், அஜீத்ராஜா ஆகியோரும் நடிக்கின்றனர். சிறுவயதிலேயே குற்றவாளிகளாக அடையாளம் காட்டப்பட்டவர்கள், வளர்ந்த பிறகு என்னவாகிறார்கள், அவர்கள் வாழ்க்கை, காதல் எப்படி இருக்கும், அதன் பின்னும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைச் சொல்ல வருகிறது இப்படம். "சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கையை" இதில் காட்டியிருப்பதாகச் சொல்கிறார் கோலிவுட் குருவியார். ஏ.ஆர். ரஹ்மானின் உதவியாளர் சாஜீத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் கஸ்தூரிராஜா.அரவிந்த்

© TamilOnline.com