அநீதிகளை அழிக்க வரும் 'பரசு'
சமுதாயத்தில் நிலவும் அநீதிகளை அழித்து நீதியை நிலைநாட்டப் போராடும் ஓர் இளைஞனின் கதையை 'பரசு' என்கிற பெயரில் திரைப்படமாக தயாரிக்கிறது ஆர்.ஆர். பிலிம்ஸ் பட நிறுவனம்.

புதுமுகம் அஜய்காந்த் நாயகனாக நடிக்க, சஞ்சனா நாயகியாக நடிக்கிறார். 12 பேரை இணை தயாரிப்பாளர்களாக கொண்டு தயாரிக்கப்படும் 'பரசு'வின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஜேவி கவனிக்கிறார்.

இனியவன் இசையமைக்க, லியாகத் அலிகான் வசனம் எழுதுகிறார். நாசர், முரளி, மன்சூர் அலிகான் ஆகியோரும் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்கள். வரும் நாட்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com