தேவையான பொருட்கள் வழக்கமான இட்டலி - 6 வெங்காயம் - 3 தக்காளி - 3 மிளகாய்த்தூள் - 1 தேயிலைக் கரண்டி பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 தேயிலைக் கரண்டி காராபூந்தி - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக் கரண்டி
செய்முறை இட்டலியை 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டி, வாணலியில் எண்ணெய் விட்டு துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உப்பும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்தெடுத்த விழுதைப் போட்டு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் இறக்கிப் பிரட்டி வைத்துள்ள இட்டலித் துண்டுகளைப் போட்டு மேலாக கொத்துமல்லித் தழை, காராபூந்தி தூவி அலங்கரிக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இது ஒரு சுவைமிக்க உணவாகும். இட்டலியைச் சுமாராக வறுத்தால் போதும், தேவைப்பட்டால் சிறிது பாவ்பாஜி மசாலா போட்டுக் கொள்ளலாம்.
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி |