சுவாரசியமான இட்டலிகள்!
சூப்பர் இட்டலி

எப்பவும் இட்டலிதானா என்று அழும் குழந்தைகளுக்கு இதோ புரதம் நிரம்பிய வித்தியாசமான லஞ்ச்.

தேவையான பொருட்கள்
வழக்கமான இட்டலி - 6
வெங்காயம் - 3
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1 கிண்ணம்
பயத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
முந்திரிப் பருப்பு - 6
சிவப்பு மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 தேயிலைக் கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேயிலைக் கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க

செய்முறை
பருப்புகளை ஊற வைத்து உப்பு, இஞ்சி, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். இதில் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்து, இட்டலிகளை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு உதிர்த்து பருப்புக் கலவையுடன் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும். உதிர், உதிராக இருக்க வேண்டும். கொஞ்சம் ஆவியில் வைத்து உதிர்த்தும் செய்யலாம். மிகச் சுவையானது. குழந்தைகள் விரும்பக் கூடியது.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com