டல்சா: ஸ்ரீ ஐயப்ப மண்டல பூஜை
ஜனவரி 12, 2014 அன்று டல்சா (ஓக்லஹோமா) மகாலட்சுமி ஆலயத்தில், ஸ்ரீ ஐயப்ப மண்டல பூஜை நடைபெற்றது. ஜனவரி முதல் தேதி பக்தர்கள் மாலையணிந்து, தினமும் மாலையில் ஐயப்ப பூஜை செய்து, ஜனவரி இரண்டாம் ஞாயிறன்று இருமுடி தாங்கி, கோவிலை வலம்வந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகப் பூஜை செய்கின்றனர். இந்த வருடமும் பூஜை, அன்னதானம் விமர்சையாக நடந்தேறின. தற்போது கோவில் திருப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அடுத்த வருடம் 18 படிகளுடன் கூடிய ஐயப்பன் சன்னிதி எழுப்பப்பட உள்ளது. பக்தர்கள் பூஜையில் பங்கேற்று ஐயப்பன் அருள்பெற வேண்டுகிறோம்.

வைத்தியநாதன்,
டல்சா, ஓக்லஹோமா

© TamilOnline.com