சிகாகோ: வறியோர்க்கு உணவு
ஜனவரி 19, 2014 அன்று அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள். தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் என அமைப்புக்கள் நான்கும் இணைந்து 2014ம் ஆண்டின் முதலாவது 'வறியோர்க்கு உணவு' வழங்கும் நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506) இல்லத்தில் நடத்தினர். இதில் தமிழ்ச் சிறாரும் அவர்தம் பெற்றோரும் பங்கேற்றனர். செல்வியர் அனுவா, தேட்சணா, சுபா, செல்வர்கள் ஆகாஷ், தார்மிக், பிரிண்டெட், திருமதிகள் ரம்யா, பூர்ணகலா, சுப்பிரஜா, திருவாளர்கள் சாக்கிரடீசு, சிற்றரசு, பிரபாகரன் ஆகியோரின் பணி பாராட்டத்தக்கது. உணவுடன் திருக்குறளின் சொல்வன்மை, இடுக்கணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை அதிகாரங்களின் விளக்கமும், பொங்கல், உழவர் திருநாள் அடங்கிய நான்கு நாட்களின் பெருமை கூறும் விவரமும், பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் தமிழர் குறித்து எழுதிய சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டன. பொறுப்பாளர் திருவாட்டி. சின்டி அவர்கள் ஒத்துழைப்பு நல்கினார்..

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com