பிப்ரவரி 23, 2014 அன்று, கேன்ஸர் இன்ஸ்டியூட் ஃபௌண்டேஷன் (CIF) ஆதரவில், களப்பணிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக 'வடபோச்சே' முழுநீள நகைச்சுவை நாடகத்தை அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் ஆஃப் பே ஏரியா (AABA) நாடகக் குழுமம் சான் ஹோசே மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேடரில் அரங்கேற்றுகிறது.
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தோடு இணைந்து இறுதிநிலைப் புற்றுநோயாளிகளுக்கு மிகத்தேவையான சேவைகளைச் செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும் CIF. ஆபா குழுமம் அஷோக் சுப்ரமணியம், டி.எஸ். ராம் (நாடகத்தின் கதை, வசன ஆசிரியர்), டி.டி. ரவி மற்றும் அனு வில்லிப்பாக்கம் இவர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இளநிலை நாடகக்குழு. ஆர்வலர்களையும், அனுபவமிக்கவர்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்நாடகத்தை டி.எஸ். ராம் இயக்குகிறார். அஷோக் சுப்ரமணியம் உதவி இயக்கம் செய்வதோடு ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
ஆபா குழுமம் பொழுதுபோக்குடன், நல்ல கதைக்களங் கொண்ட நாடகங்களை நடத்தவுள்ளது. கதையா? அதுதான் சொல்லிவிட்டோமே, ஒரே வரியில்! "ஒரு பாட்டி... ஒரு காக்கா... ஒரு வடை..." மீதியை நாடக மேடையில் காணுங்கள்!
டி.எஸ். ராம் |