துணை முதல்வர்


கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடிக்கும் படம் 'துணை முதல்வர்'. கதாநாயகியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெயராம், மீனாட்சி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர். விவேகானந்தன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மத்திய சென்னை என்ற படத்தை இயக்கியவர். பிரதீப், ராம்பிரசாத், பாலாஜி, ஜெய் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். ஏப்ரல் தமிழ்ப் புத்தாண்டன்று படம் வெளியாக இருக்கிறது. இந்த நகைச்சுவைப் படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்கிறார் கோலிவுட் கோவிந்து. ஊர் பெரியமனிதர் பாக்யராஜ். அவர் நண்பர் ஜெயராம். இருவருமாக ஊரை முன்னேற்றப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். பின் அதனை நாடு முழுவதும் கொண்டு வர, நினைக்கின்றனர். அது நடந்ததா, இல்லையா என்பதை நகைச்சுவையோடு வருகிறார் துணை முதல்வர்.

அரவிந்த்

© TamilOnline.com