பூனை


விக்னேஷ் நாயகனாக நடிக்கும் படம் பூனை. நாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரகலா நடிக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்க்ரிஷ் மிர்னாலி இயக்குகிறார். இசை: கார்த்திக் ராஜா. அப்பாவி ஒருவன் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பெற்று தண்டனை அடைகிறான். ஜெயிலிருந்து தப்பி வருகிற அவன் சந்திக்கிற திகிலூட்டும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. பூனை புலியாக மாறுவதுதான் படத்தின் ஒன் லைனாம். "இந்தப் படம் என்னைக் கலையுலகில் நல்ல நடிகனாக, நட்சத்திர அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தரும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் விக்னேஷ்.

அரவிந்த்

© TamilOnline.com