புறம்போக்கு
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் இணைந்து நடிக்கும் படம் புறம்போக்கு. இயற்கை, ஈ, பேராண்மை படங்களுக்குப் பிறகு இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படம் இது. இப்படத்தில் மெத்தப்படித்த பொருளாதரா நிபுணராக ஆர்யாவும், சாதாரண ரயில்வே கூலித் தொழிலாளியாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். எதிரெதிரான வாழ்க்கை முரண்களைப் பேச இருக்கும் படத்தில் டூயட்டோ, கவர்ச்சியோ ஏதும் இருக்காது என்கிறார் ஜனநாதன். நாயகியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். அவருக்கு ஆக்‌ஷன் கலந்த வேடமாம். இப்படத்திற்காக அவர் புதிதாக 'டேப் டான்ஸ்' என்னும் நடனத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறாராம். இசை: வர்ஷன்.அரவிந்த்

© TamilOnline.com