ரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்
உலகின் எந்தப் பகுதியில் இருப்போரும் டாக்டர். ரோஹன் கிருஷ்ணமூர்த்தி லெஸன்ஃபேஸ் வழியே வழங்கவிருக்கும் இந்தியத் தாளவாத்திய மாஸ்டர் வகுப்பில் பங்கேற்கலாம். இந்திய லயத்தின் அடிப்படை மட்டுமின்றி, அதைப் பிறவகைத் தாளவாத்தியங்களில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் அவர் கற்பிப்பார். உயர்தரக் காணொலி மாநாட்டுத் தொழில்நுட்பத்தில் (Video Confernecing) இணையம் வழியே நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் உலகெங்கிலுமிருந்து அதிகபட்சம் 90 பேர்வரை பங்கேற்க முடியும்.

ஈஸ்ட்மன் ஸ்கூல் ஆஃப் மியூசிக்கிலிருந்து அண்மையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றுள்ள ரோஹனின் மிருதங்க மேதைமையை USA Today, The Times of India, Rediff ஆகியவை பாராட்டி எழுதியதுண்டு. மிருதங்கத்தைச் சுருதி கூட்டுவதற்கு அவர் கண்டுபிடித்த செயல்முறை விருது பெற்ற ஒன்றாகும்.

அவருடைய வகுப்பு இணையத்தில் நேரலை ஓடையாக வரவிருக்கும் நேரம் ஃபிப்ரவரி 16, 2014, 10:30 PM IST / Noon EST. இது ஒளிப்பதிவு செய்யப்பட்டு பங்கேற்போருக்குப் பின்னர் மறு ஆய்வுக்கென வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: www.lessonface.com/rohanclass

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com