தேவையான பொருட்கள்
செளசெள - 1 மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு
செய்முறை
செளசெளவைத் தோல் சீவி, காரட் துருவலில் சீவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய துண்டங்களுடன் மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும். இதில்
மிளகாய்த்தூள் போட்டு நன்றாகக் கிளறவும்.
மாங்காய்த் தொக்கு போலச் சுருண்டு வரும் போது இறக்கி வைத்து உபயோகிக்கவும். நல்லெண்ணெய் விட்டால் தூள். தொக்கு சுவை கூடுதலாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |