ஈ
ஜீவா, நயன்தாரா நடித்திருக்கிறார்கள். இயற்கை படத்தை இயக்கிய ஜனநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும் தொழிலாளியாக நடித்திருக்கிறார் ஜீவா. 'ஈ' என்கிற ஈஸ்வரனாக ஜீவா படத்தில் வாழ்ந்திருக்கிறார். கருணாஸ், பசுபதி, ஆஷிஸ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்திரி தயாரித்து அளித்திருக்கிறார்.
வரலாறு
அஜீத்குமார் நாயகனாக நடிக்க, கனிகா நாயகியாக நடித்திருக்கிறார். முன்பு 'காட்பாதர்' என்ற பெயரில் உருவான இப்படம் பிறகு 'வரலாறு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்பா, அவரது இரண்டு பிள்ளைகள் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அஜீத். பரதநாட்டிய கலைஞராக வரும் அஜீத் நடிப்பு அற்புதம். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை பாடல்கள் வைரமுத்து. அஜீத்தின் மூன்று பாத்திரங்களையும் அழகாக இயக்கியிருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.
தர்மபுரி
விஜயகாந்த் நாயகனாக நடிக்க, நாயகியாக லட்சுமிராய் நடித்திருக்கிறார். பேரரசு இயக்கிய இப்படத்தில் மணிவண்ணன், பிரகாஷ்ரெட்டி, மணிவண்ணன், பாபி என்று நான்கு வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார். இவர்களுடன் விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர், மணிவண்ணன், ராஜ்கபூர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தலைமகன்
சரத்குமார் நாயகனாக, நாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்கள். தண்ணீர் தான் கதையின் முக்கிய கரு. நேர்மையான, துணிச்சலான பத்திரிகையாளராக வலம் வருகிறார் சரத்குமார். விறுவிறுப்பான சுவாரசியமான பல்வேறு திருப்பங்களை கொண்ட கதை தலைமகன். கெளரவ வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும், குஷ்புவும் நடித்திருக்கிறார்கள். பால், ஜே.ஸ்ரீகாந்த்தேவா என்று இரண்டு இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருக்கிறார்கள்.
வட்டாரம்
சரண் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க, நாயகியாக புதுமுகங்கள் கீரத் பட்டேல், அதிசயா ஆகியோர் நடித்திருக் கின்றனர். வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளை வரவழைத்து விற்பனை செய்யும் தொழிலை செய்கிறான் நாயகன். அவனைச்சுற்றி கதை நகர்கிறது. இவர்களைத் தவிர நெப்போலியன், ரமேஷ்கண்ணா, வையாபுரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார்.
வல்லவன்
சிலம்பரசனுடன் நயன்தாரா, ரீமாசென், சந்தியா ஆகிய மூவரும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். கல்லூரி மாணவராக நடிக்கிறார் சிலம்பரசன். யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில் 'லூசுப்பெண்ணே', 'யம்மாடி ஆத்தாடி' பாடல்கள் அற்புதமாக வந்திருக்கிறது. கதை, திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை சிலம்பரசன் கனகச்சிதமாக செய்திருக்கிறார்.
வாத்தியார்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்திருக்கிறது 'வாத்தியார்'. இதில் நாயகியாக புதுமுகம் சுஜா நடித்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அரசியல் வாடை அதிகம் வீசுகிறது.
தீபாவளி படங்களில் 'வரலாறு' ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 'ஈ' ரசிகர்கள் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. இந்த தீபாவளி நயன்தாராவிற்கு கொண்டாட்ட தீபாவளி. ஆம் அவர் நடிப்பில் மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளி வந்திருக்கிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |