BATM: குழந்தைகள் தினம்
டிசம்பர் 7, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. இதில் பல்வேறு கலை மற்றும் இந்தியப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிறாருக்கான ஓவியப் போட்டியில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org

இந்திரா தங்கசாமி,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com