செளசெள பச்சடி
தேவையான பொருட்கள்

செளசெள - 1
தேங்காய்த் துருவல் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தயிர் - 1 1/2 கிண்ணம்
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தாளிப்பதற்கு

செய்முறை

செளசெளவைத் தோல் சீவி நறுக்கி கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும். எண்ணெய் விட்டுச் சுருள வதக்கி உப்புப் போட்டு வைத்து தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் காயுடன் கலந்து தயிர் சேர்த்துக் கரைக்கவும்.

காய் ஆறியபின் தயிர் விட வேண்டும்.

பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com