அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம்: கிறிஸ்து பிறப்பு
டிசம்பர் 8, 2013 அன்று அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம் கிறிஸ்து பிறப்பு விழாவைப் புனித ஃபிலிப் தேவாலயத்தில் (Saddle Brook,

NJ) கொண்டாடியது. பல்வேறு வடகிழக்கு அமெரிக்க மாகாணங்களில் இருந்து வந்திருந்த, ஒன்பது தந்தையர்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்ற, விழா விமரிசையாக ஆரம்பித்தது.

அதை தொடர்ந்து, பெரியோர் மற்றும் சிறுவர் பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்பு கரோல் பாடல்கள் பாடி அனைவரையும் இசைமழையில் நனைத்தனர். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளில் அனைத்து வயதுப்

பிள்ளைகளும், நடனமாடி, பாடல்கள் பாடி, இசைக்கருவிகள் மீட்டி மகிழ்வித்தனர். அமெரிக்கத் தமிழ் சங்கத்தின், "பைந்தமிழ் பூங்கா" தமிழ்ப் பள்ளியின் சார்பில், மாணவர்கள் இரு சிறப்பு நாடகங்கள் வழங்கினர்.
அதன் பின்பு, பெரியவர்கள் நகைச்சுவை மற்றும் நடன விருந்து வழங்க, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகள் வழங்க விழா இனிதே நிறைவேறியது.

அமெரிக்க தமிழ் கத்தோலிக்க சங்கம், இரு மாதத்திற்கு ஒருமுறை தமிழ் திருப்பலி நிறைவேற்றுகிறது.

மேலும் தகவலுக்கு:
மின்னஞ்சல் - tamilcatholicsusa@yahoo.com
வலையகம் - www.tamilcatholicsusa.org

ஜான் லாரென்ஸ்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com