வேளச்சேரி


நீண்ட இடைவெளிக்குப் பின் சரத்குமார் நாயகனாக நடிக்க இருக்கும் படம் வேளச்சேரி. சென்னை வேளச்சேரியில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. நாயகியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, சென்ட்ராயன், இமான், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை பா. விஜய், விவேகா, சினேகன், கானா பாலா ஆகியோர் எழுத, தாஜ்நூர் இசையமைக்கிறார். வேந்தன் இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்கிறார் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com