நேர் எதிர்


ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் நேர் எதிர். பார்த்தி நாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் எம். எஸ். பாஸ்கர், ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை ம. ஜெயபிரதீப் இயக்குகிறார். "மனிதன், அவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர் எதிர் ஆக இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு சுவாரஸ்யப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் நேர் எதிர்" என்கிறார் இயக்குநர். அறிவுமதி, கமலக்கண்ணன், ஜெய பிரதீப் ஆகியோர் பாடல்களை எழுத, சதீஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com