மீகாமன்


ஆர்யா நடிக்கும் புதிய படம் மீகாமன். மகிழ்திருமேனி இயக்குகிறார். டாப்ஸி அல்லது ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க இருக்கிறார். ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஆர்யா மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார். "கதாநாயகன் ஒரு காரியத்தை கையில் எடுத்து, அதனை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக கதை அமைத்திருக்கிறேன். ஆர்யாவின் கெட்டப்பை இப்படத்தில் மாற்றியிருக்கிறோம்" என்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. 'மீகாமன்' என்றால் மாலுமி என்பது பொருள். (மாலுமின்னா என்னாங்க!)

அரவிந்த்

© TamilOnline.com