ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.


தகராறு படத்தைத் தொடர்ந்து அருள்நிதி நாயகனாக நடித்து வரும் படம் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும். மு.க. தமிழரசு தயாரிக்கும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். பிந்து மாதவி மற்றும் அஸ்ரிதா ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நாசர், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி, "இது ரொமாண்டிக் காமெடிப் படம். தனக்குச் சொந்தமானதை யாருக்கும் விட்டுத்தராத மூன்று சுயநலமிக்க நண்பர்களின் கதை. அருள்நிதி முதன்முறையாகக் காமெடியாக நடிக்கிறார். கதையோடு இணைந்த காமெடி" என்கிறார் இயக்குநர். பாடல்களை வைரமுத்து எழுத நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com