செளசெள பால்கூட்டு
தேவையான பொருட்கள்

செளசெள - 2
தேங்காய் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
பால் - 1/2 கிண்ணம்

செய்முறை

செளசெளவைத் தோல் சீவி சிறுசிறு துண்டங்களாக நறுக்கி சிட்டிகை உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காயை நைசாக அரைத்துப் போட்டு இறக்கி வைத்து சர்க்கரையும், பாலும் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.

நீர்க்க இருந்தால் 1 தேக்கரண்டி அரிசி மாவைப் பாலிலேயே கரைத்துவிடலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com