பொங்கல் நல்ல பொங்கலாம்!
பொங்கல் நல்ல பொங்கலாம்
வீடு நிறைஞ்ச பொங்கலாம்!
காடு விளைஞ்ச பொங்கலாம்
மாடு பிடிக்கும் பொங்கலாம்!

காணும் நல்ல பண்பினைப்
பேணும் நட்புப் பொங்கலாம்
உழவர் மேன்மை போற்றிட
உலகம் வாழ்த்தும் பொங்கலாம்!

பால் பானை பொங்கிட
பொங்கல் நல்ல பொங்கலாம்!
இஞ்சி கரும்பு மஞ்சளும்
கொஞ்சும் நல்ல பொங்கலாம்!

இரும்பு போன்ற பல்லினால்
கரும்பு தின்னும் பொங்கலாம்
பழமை நீங்கப் புதுமையாய்
தையில் வந்த பொங்கலாம்!

இளவேலங்கால் க. நல்லையா,
ப்ளூம்ஃபீல்ட் ஹில்ஸ், மிச்சிகன்

© TamilOnline.com