கணிதப்புதிர்கள்
1) ஒரு கல்லூரி விழாவில் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் உடன்வந்திருந்த சக மாணவர்களுடன் ஒவ்வொருவருடனும் கை குலுக்கினர். அப்படியானால் அங்கே எத்தனை கை குலுக்கல்கள் நிகழ்ந்திருக்கும்?

2) 1 முதல் 9 வரை உள்ள எண்களை மட்டும் பயன்படுத்தி x/y = 1/3 என்ற சமன்பாடு வரும்படிச் செய்ய முடியுமா?

3) ராமுவின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத் தொகை 32. ராமு வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 544 வருகிறது. ராமுவின் வயதைவிட அவன் தம்பியின் வயது எட்டு வருடம் குறைவு என்றால் ராமுவின் வயது என்ன, அவன் தம்பியின் வயது என்ன?

4) கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ வகுத்தோ நான்கு நான்குகளை மட்டும் பயன்படுத்தி விடை நான்கு வரச் செய்யமுடியுமா?

5) 1, 9, 9, 6 என்ற எண்களையும் +, -, X, /, √, ^ போன்ற கணிதக் குறிகளையும் பயன்படுத்தி விடை 100 மற்றும் 1000 வரச் செய்யவேண்டும் முடியுமா?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com