தேவையான பொருட்கள்
செளசெள - 2 மிளகாய் வற்றல் - 4 உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி புளி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
செளசெளவைத் தோல் சீவி சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் செளசெள துண்டுகளை வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு மறுபடியும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்புகளை வறுத்து எடுக்கவும். வறுத்த பருப்புகளுடன் தேங்காய், புளி, உப்பு, வெந்த காய்களைச் சேர்த்து நைசாக அரைத்து
எடுக்கவும்.
இதே போலத் சௌசௌ தோலையும் துவையலாக அரைக்கலாம்.
செளசெள தோலையும் மெல்லியதாக நறுக்கி எண்ணெய்யில் நன்றாக வதக்கி மேற்சொன்னவாறு பருப்புகள், தேங்காய், புளி சேர்த்து துவையல் செய்து பாருங்களேன்.
அடேயப்பா ருசியான ருசியாய் இருக்கும்.
தங்கம் ராமசாமி |