தேவையான பொருட்கள் கோவைக்காய் (பொடியாய் நறுக்கியது) - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 2 தேயிலைக் கரண்டி கடலைப்பருப்பு - 1 தேயிலைக் கரண்டி மிளகாய் வற்றல் - 3 அல்லது 4 பெருங்காயம் - சிறிதளவு புளி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - வறுப்பதற்கு
செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்துக் கொள்ளவும். கோவைக்காயை எண்ணெய் விட்டுச் சுருள வதக்கிக்கொண்டு உப்பு, புளி சேர்த்து நைசாக அரைத்து, வறுத்து வைத்துள்ள பருப்பு மிளகாயும் சேர்த்து நன்றாகத் தேங்காயும் போட்டு அரைத்து எடுக்கவும். மிகவும் சுவையான துவையல் ரெடி. இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |