தேவையான பொருட்கள் 7
செளசெள - 2 பயத்தம்பருப்பு (அ) துவரம் பருப்பு - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் மிளகு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 பெருங்காயம் - சிறிதளவு மஞ்சள் பொடி - 2 சிட்டிகை உப்பு - தேவைக்கேறப் கறிவேப்பிலை, கடுகு, உ.பருப்பு - தாளிப்பதற்கு
செய்முறை
செளசெளவைத் தோல்சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பயத்தம் பருப்பு அல்லது துவரம் பருப்பை மஞ்சள் பொடி போட்டு வேகவிட்டுக் கொள்ளவும். நறுக்கிய காயை மஞ்சள்பொடி, உப்பு போட்டு வேகவிடவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துத் தேங்காய்த் துருவலுடன் மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வெந்த காய், பருப்பு எல்லாவற்றையும் அரைத்த விழுதுடன் கொட்டிக் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும் போது கடுகு, உளுத்தம்பருப்பு போன்றவற்றைத் தாளித்து கொஞ்சம் கறிவேப்பிலை போட்டுக் கீழே
இறக்கி வைக்கவும்.
தங்கம் ராமசாமி |