சென்னையில் திருவையாறு - சீசன் 9
டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். ஒவ்வோராண்டும் திருவையாற்றில் 'தியாகராஜர் ஆராதனை விழா' சிறப்பாக நடத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவர். எல்லோரும் அதில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்காகச் சென்னையில் ஏன் அப்படியோர் இசைவிழாவை மிகப்பெரிய அளவில் நடத்தக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவுதான் 'லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்' ஒன்பதாம் முறையாக நடத்தவிருக்கும் 'சென்னையில் திருவையாறு'.

இசை விழா டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 11.30மணிக்கு நாகஸ்வரத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து கர்நாடக சங்கீதக் கலைஞர்களுள் மூத்தவரும் பல்வேறு சிறப்புகள் பெற்றவருமான பத்மபூஷண் பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் இளைய தலைமுறையினர் உட்பட முன்னூறுக்கு மேற்பட்ட கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி திருவையாறு ஆராதனை விழாவைச் சென்னை காமராஜர் அரங்கில் கொண்டுவர உள்ளார்கள். எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த இசைவிழாவில் துவக்க நாள் மாலை 5.30 மணிக்கு பிர்ஜு மகாராஜ் அவர்களின் கதக் நடனமும், இரவு 7.30 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டும் இடம்பெறும்.

துவக்க விழாவுக்கு அனுமதி இலவசம். 'பஞ்சரத்ன கீர்த்தனைகளை' பாடவும், கருவியில் இசைக்கவும் தெரிந்தவர்களை இதற்கு வரவேற்கின்றோம். பாரம்பரியமிக்க திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தைக் கண்முன்னே கொண்டுவரும் வகையில் அரங்க மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

12/18/2013 புதன்கிழமை
காலை 11.30 மணி எஸ்.ஆர்.ஜி.எஸ். மோகன்தாஸ், நாகஸ்வரம்
மாலை 4.00 மணி பி.எஸ். நாராயணசாமி, பஞ்சரத்ன கீர்த்தனைகள்
மாலை 5.30 மணி பிர்ஜூ மகாராஜ், கதக்
இரவு 7.30 மணி நித்யஸ்ரீ மகாதேவன், வாய்ப்பாட்டு

12/19/2013 வியாழக்கிழமை
காலை 7.00 மணி உடையாளூர் கல்யாணராமன் நாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணி மகாலக்ஷ்மி, பரதநாட்டியம்
காலை 10.30 மணி கிட்டார் பிரசன்னா, கிட்டார்
மதியம் 1.00 மணி ராகினிஸ்ரீ & மது ஐயர், வாய்ப்பாட்டு
மதியம் 2.45 மணி ஹரிசரண், வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி ப்ரியா சகோதரிகள், வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி ராஜேஷ் வைத்யா-ஸ்டீபன் டெவசி, வீணை/கீபோர்டு

12/20/2013 வெள்ளிக்கிழமை
காலை 7.00 மணி மங்கையர்க்கரசி, பக்தி உரை
காலை 9.00 மணி காவ்யலஷ்மி, பரதநாட்டியம்
காலை 10.30 மணி அமிர்தம் எனும் தலைப்பில் - கே.வி.பிரசாத் & லியோன் ஜேம்ஸ் குழு கர்நாடிக் ஜுகல்பந்தி
மதியம் 1.00 மணி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் வாய்ப்பாட்டு
மதியம் 2.45 மணி சாருலதாமணி, வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி ரஞ்ஜனி காயத்ரி, வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி மல்லாடி சகோதரர்கள் & குண்டேச்சா சகோதரர்கள் வாய்ப்பாட்டு

12/21/2013 சனிக்கிழமை
காலை 7.00 மணி கோவை. எஸ். ஜெயராமன், நாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணி சாந்தி சுரேஷ், வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி சிக்கில் எஸ். குருசரண், வாய்ப்பாட்டு
மதியம் 1.00 மணி விதிஷா பரதநாட்டியம்
மதியம் 2.45 மணி நிர்மலா ராஜசேகர்-கவுரவ் மஜும்தார், வீணை-சிதார்
மாலை 4.45 மணி ஓ.எஸ்.அருண், வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி நிஷாத் கான், சிதார்

12/22/2013 ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00 மணி தாமல் ராமகிருஷ்ணன், உபன்யாசம்
காலை 9.00 மணி சுதா & ஷேரன் ஷெல்சியா, பரதநாட்டியம்
காலை 10.30 மணி மகாநதி டாக்டர். ஷோபனா விக்னேஷ், வாய்ப்பாட்டு
மதியம் 1.00 மணி மீனாட்சி ராகவன், பரதநாட்டியம்
மதியம் 2.45 மணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன், பரதநாட்டியம்
மாலை 4.45 மணி பி.உன்னிகிருஷ்ணன், வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி விஜய் பிரகாஷ், வாய்ப்பாட்டு

12/23/2013 திங்கட்கிழமை
காலை 7.00 மணி அனந்த பத்மநாபாச்சாரியார், உபன்யாசம்
காலை 9.00 மணி சாஸ்வதி பிரபு, வாய்ப்பாட்டு
காலை 10.30 மணி காயத்ரி வெங்கட்ராகவன், வாய்ப்பாட்டு
மதியம் 1.00 மணி சைந்தவி, வாய்ப்பாட்டு
மதியம் 2.45 மணி நிஷா ராஜகோபால் வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி அஷ்வினி பீடே, வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி கதிரி கோபால்நாத், சாக்ஸஃபோன்

12/24/2013 செவ்வாய்க்கிழமை
காலை 7.00 மணி கடலூர் கோபி, நாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணி நா. ப்ரதிக்ஷா தர்ஷினி, பரதநாட்டியம்
காலை 10.30 மணி சர்ச்சில் பாண்டியன் வழங்கும் கலர்ஸ் ஆப் இந்தியா, நடனம்
மதியம் 1.00 மணி சொர்ணமால்யாவின் ரங்கமந்திரா நிகழ்கலைப் பள்ளி, பரதநாட்டியம்
மதியம் 2.45 மணி கர்நாடிகா சகோதரர்கள் & ஜோத்ஸ்னா, வாய்ப்பாட்டு-வயலின்
மாலை 4.45 மணி எஸ்.செளம்யா, வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி சுதா ரகுநாதன், வாய்ப்பாட்டு

12/25/2013 புதன்கிழமை
காலை 7.00 மணி துக்காராம் கணபதி, நாமசங்கீர்த்தனம்
காலை 9.00 மணி சுபத்ரா மாரிமுத்து, பரதநாட்டியம்
காலை 10.30 மணி மஹதி, வாய்ப்பாட்டு
மதியம் 1.00 மணி டாக்டர். கணேஷ், வாய்ப்பாட்டு
மதியம் 2.45 மணி ஷோபா சந்திரசேகர், வாய்ப்பாட்டு
மாலை 4.45 மணி பர்வீன் சுல்தானா, வாய்ப்பாட்டு
இரவு 7.30 மணி ஷோபனா பரதநாட்டியம்

சீசன் டிக்கட்டுகளும், தனி நிகழ்ச்சிகளுக்கான அனுமதிச் சீட்டுகளும் காமராஜர் அரங்கிலும், வடபழனி லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸிலும் கிடைக்கும்.

இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய: www.lakshmansruthi.com, www.Vikatan.com
மேலும் விபரங்களுக்கு: www.lakshmansruthi.com
மின்னஞ்சல்: ct@lakshmansruthi.com
தொலைபேசி எண்: 91-44-44412345, 9941922322, 9941907711

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com