சௌசௌ என்றாலே சுவாரசியமில்லாமல் சவசவ என்றிருக்கும் காய் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அதிலும் பல சுவையான பதார்த்தங்களைத் தயாரிக்க முடியும். செய்துதான் பாருங்களேன்.
செளசெள பொரியல்
தேவையான பொருட்கள்
செளசெள - 2 தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம் பயத்தம் பருப்பு - 1/2 கப் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை
செளசெளவைத் தோல் சீவித் துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போன்றவற்றைத் தாளிக்கவும். கடுகு வெடித்துப் பருப்பு பொன்னிறமாக வந்த வுடன் காயைப் போட்டு, அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடி வைக்கவும். காய் நன்றாக வெந்தவுடன், பயத்தம் பருப்புப் போட்டு மேலும் கொஞ்சம் வேகவிடவும்.
கடைசியாக தேங்காய்த் துருவல், கறி வேப்பிலை போட்டு ஒரு புரட்டுப் புரட்டி இறக்கவும். ம்ம்... சுவையான பொறியல் தயார்.
தங்கம் ராமசாமி |