பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
அக்டோபர் 12, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழாவை மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் கொண்டாடியது. சங்கத் தலைவர் திரு. ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிகளில் 144 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்டனர். பரதம், வாய்ப்பாட்டு, வீணை, மிருதங்கம், வயலின் முதலிய கருவிகளின் இசையும் நடைபெற்றது. சினிமா மற்றும் கிராமிய நடனங்களும் மெல்லிசையும் இடம்பெற்றன. மைத்ரி குழுவினர் வழங்கிய பஞ்ச வாத்திய இசை அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியை ரவி, சுகி சிவா, சுபா ராஜேஷ், கௌரி சேஷாத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். வேணு ரங்கநாதன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

திருமலை ராஜன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com