கடந்த அக்டோபர் மாதத்தில் ஒடிஸாவின் கடலோரப்பகுதிகள் ஃபைலின் புயலினால் கடும் பாதிப்புக்குள்ளாகின. அங்கே எண்பதினாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளும், 80,000 ஹெக்டேர் பரப்பில் பயிர்களும் சேதமடைந்தன. 'குரு ஷ்ரத்தா' அமைப்பு கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியிலுள்ள பல நாட்டியக் குழுக்களை இதற்கு நிதி திரட்ட அழைத்ததன் பேரில் பலர் முன்வந்துள்ளனர். இதற்காக ஒரே மேடையில் பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிஸி, கதக், மோகினியாட்டம் என்ற ஐந்துவித நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
யுவபாரதி, இசூமி சேட்டோ (Izumi Sato), ஜ்யோதிர் கலாமந்திர், கலாவிஷ்கார் டான்ஸ் ஸ்கூல், நாட்டியாலயா, நாட்யாலயா குச்சுபுடி டான்ஸ் ஸ்கூல், ந்ருத்யாஞ்சலி, ந்ருத்யானந்தா குச்சுபுடி டான்ஸ் ஸ்கூல், சம்ஸ்கார் டான்ஸ் ஸ்கூல், ஸ்ரீக்ருபா டான்ஸ் ஸ்கூல், திருச்சிற்றம்பல டான்ஸ் கம்பெனி, விச்வசாந்தி டான்ஸ் அகாடமி உட்படப் பல குழுக்களும் தனிநபர்களும் இதில் பங்களிக்கின்றனர். திரட்டப்படும் நிதி ஒடிஸா அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும்.
இடம்: ஜெயின் கோவில் அரங்கம், மில்பிடாஸ், கலிஃபோர்னியா தேதி: டிசம்பர் 14, 2013; மதியம் 2 முதல் மாலை 6 மணிவரை
நன்கொடைச் சீட்டுகள் வாங்க: ராகா குப்தா: 510.366.3825 - yuva_bharati@yahoo.com குரு ஷ்ரத்தா: 650.394.6022 - gurushradha@gmail.com வலைமனை: www.yuvabharati.org
செய்திக் குறிப்பிலிருந்து |