மெய்யழகி


பாலாஜி நாயகனாகவும், ஜெய்குவேதனி நாயகியாகவும் நடிக்கும் படம் 'மெய்யழகி'. படத்தில் வில்லனாக அந்தக்கால விஜயபுரி வீரன் சி.எல். ஆனந்தனின் மகன் அருண் நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் அக்காள் ஜெனி ஜாஸ்மின், பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தை ஆர்.டி. ஜெயவேல் இயக்குகிறார். 170 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த கதாநாயகனைக் காப்பாற்றுவதற்காக தானும் 'டூப்' இல்லாமல் கிணற்றுக்குள் குதித்து நடித்துள்ளார் நாயகி ஜெய்குவேதனி. அசாத்திய துணிச்சல்தான்.

அரவிந்த்

© TamilOnline.com