ஜன்னல் ஓரம்


பார்த்திபன் பேருந்து ஓட்டுநராகவும், விமல் நடத்துனராகவும் நடிக்கும் படம் ஜன்னல் ஓரம். ராஜேஷ், விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கரு. பழனியப்பன் இயக்க, வித்யாசாகர் இசையமைக்கிறார். ஒரு பேருந்து, அதன் ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் இவர்களுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஆர்டினரி' படத்தின் ரீமேக்தான் இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்தசாமி.

அரவிந்த்

© TamilOnline.com