மாமிசக் கழுகுகள்
இறைவா....
தவறேதுமில்லை
உனது
படைப்பில்

தவறுகள்
எங்களது
புரிதலில்தான்

இனி
மானுடம்
மாறுவது
ஒரு
கனாக்காலமே

உயிரினங்கள்
உல்லாசமாய்
உலவிவர

தலைகுனிந்து
தரை அளந்து
நடக்கிறேன்

பன்றிகூட
முறைத்துவிட்டு
வீறுநடை
பழகுகிறது

பாரதியின்
ரௌத்திரத்திற்கு
வேலை இல்லை

ஒதுங்க
இங்கு
இடமில்லை
எனக்கு
எத்திசையிலும்
வட்டமிடும்
மாமிசக் கழுகுகள்!

ராதா விஸ்வநாதன்

© TamilOnline.com