பருப்புத் துவையல்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் பாசிப்பருப்பைப் பொடித்துக்கொண்டு, பின் தேங்காய்த் துருவலுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். துவையல் தயார்.

கேஸ் அடுப்பில் மிதமான வெப்பத்தில் அப்பளத்தை நன்கு வாட்டி எடுக்கவும். மழை மற்றும் குளிர் காலங்களில் சூடான சாதத்துடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயுடன் மிளகுக் குழம்பு சேர்த்து அதற்குப் பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் தொட்டுக்கொண்டு சாப்பிட ரொம்பச் சுவையாக இருக்கும். இந்த உணவு நார்ப்பொருள் மிக்கது. விடமின் ஏ, சி, கால்சியம், பொடாசியம், இரும்பு, புரதம் உட்பட பல தாதுப்பொருட்கள் நிரம்பியது.

கோமதி ஜானகிராமன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com