வேளாங்கன்னி மாதா திருவிழா
செப்டம்பர் 8, 2013 அன்று அன்னை வேளாங்கன்னி மாதா திருவிழா ஃப்ரீமான்டிலுள்ள அன்னை திருத்தலத்தில் கொண்டாடப்பட்டது. திருவிழா திருப்பலியை ஃபாதர் அந்தோணி, ஃபாதர் க்ரிஸ்டி ஆரோக்கியராஜ், ஃபாதர் ஜாய் பாபு, ஃபாதர் லாரன்ஸ், ஃபாதர் எட் சாமி, ஃபாதர் ஜோசஃப் சுவாமி ஆகியோர் வழிநடத்தினர். திருப்பலிப் பாடல்கள் பல்வேறு இந்திய மொழியில் இடம்பெற்றன. நானூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பலிக்குப்பின் மாதாவின் சிறப்புத் தேர் பவனி நடைபெற்றது. தேருக்குப் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பவனியின்போது ஜபமாலையும், மாதாவின் திருப்பாடல்களும் இடம்பெற்றன. திருப்பலியில் பங்குபெற்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் புனித எண்ணெய் வழங்கப்பட்டது. விழா முடிவில் மேஜிக் விஜயின் காட்சி நடைபெற்றது. மாதாந்திரத் திருப்பலி பூசை (novena mass) ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு நடைபெறும்.

விவரங்களுக்கு: அன்னை வேளாங்கன்னி ஆலயம், 34700 ஃப்ரீமாண்ட் பொலிவர்டு, கலிஃபோர்னியா 94555.
தொலைபேசி: 408-506-4474

ஜான்சன் பால்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com