செப்டம்பர் 21, 2013 அன்று வாழும் கலை (Art of Living) சான்டா கிளாரா மையத்தில், சர்வதேச அமைதி தின விழா கொண்டாடப்பட்டது. 32 ஆண்டுகளாக ஐ.நா. சபை இந்த நாளை சர்வதேச அமைதி தினமாக அறிவித்துள்ளது. தனிமனிதனையும், உலகையும் அமைதிப் பாதையை அடையவைப்பதே இந்த நாளின் குறிக்கோள். அமைதி தினத்தை நினைவுகூரும் விதமாக உலகெங்கிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வாழும் கலையின் 'அழுத்தமற்ற, வன்முறையற்ற (Stress Free Violence Free) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நாளில் அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றிணைத்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. பல்சமயப் பிரார்த்தனை, குழந்தைகள் பங்கேற்ற அமைதிப் பாடல்கள், அமைதிக்கான கூட்டு தியானம் ஆகியவை நடைபெற்றன. விழாவில், வாழும் கலையின் "Inner Peace for World Peace" இசைக்குறுவட்டு வெளியிடப்பட்டது. இதற்கான இணையதளம்: www.innerpeacetoworldpeace.com. இதில் உலகின் பல்வேறு கலாசார/சமயப் பாடல்கள் உள்ளன.
வாழும் கலை ஒரு சர்வதேச, லாப-நோக்கமற்ற, ஆன்மீகக் கல்வி மற்றும் மனிதநேய அமைப்பாகும். இது நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. வாழும் கலை பயிற்சிகள் பற்றி அறிய: us.artofliving.org
பிரீதி பத்மநாபன், சான்டா கிளாரா, கலிஃபோர்னியா |