அக்டோபர் 13, 2013 அன்று ஐசிசி மில்பிடாஸில், Global Fund for Women அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக செல்வி. ஷ்ரேயா ரமேஷ் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தினார். பிரசென்டேஷன் உயர்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இவர், பன்னிரண்டு ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வருகிறார். 2008லிருந்து குரு சுகந்தா ஸ்ரீநாத்திடம் நடனம் கற்கிறார்.
Global Fund for Women அமைப்பு பெண்களின் கல்வி மற்றும் பொருளாதாரத் தாழ்வுநிலையைப் போக்குவதற்காக உலகம் முழுதும் பணியாற்றி வருகிறது. அவர்களது உரிமைகளை எடுத்துக் கூறி சமுதாயத்தில் முதன்மை பெறவும் வழி காட்டுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்குத் தனது பங்கை அளிக்க ஆசைப்பட்டு ஷ்ரேயா இந்த நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் 4500 டாலர் நிதி திரட்டி வழங்கினார்.
|