நவம்பர் 18 முதல் 29ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிசிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலியவற்றின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிஃபோர்னியா 11.18 - 11.23 டியர்பார்ன், மிசிகன் 11.25 - 11.29
இங்கு இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: http://www.amritapuri.org/activity மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |