தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம்
சாகித்ய அகாதமி இளம் கலைஞர்களுக்கு யுவபுரஸ்கார் விருது அளிப்பது போலவே சங்கீத நாடக அகாதமியும் ஒவ்வோர் ஆண்டும் 35 வயதிற்குட்பட்ட இளம் இசைக்கலைஞர்களுக்கு விருதளிக்கிறது. 2011ம் ஆண்டுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருது பிரபல கர்நாடக இசைக் கலைஞரான அபிஷேக் ரகுராம் (வாய்ப்பாட்டு), எம். அனந்த கிருஷ்ணா (குழலிசை), புண்யா ஸ்ரீநிவாஸ் (வீணை), எச்.என்.பாஸ்கர் (வயலின்) ஆகியோர் உட்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 பேருக்கு வழங்கப்பட்டது. கேடயத்துடன், 25,000 ரூபாய் பரிசுப் பணமும் கொண்டது இவ்விருது.© TamilOnline.com