தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம்
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர், "நாடகத்தின் நிறைவுப் பகுதியை எழுதி முடித்த பிறகு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தனிமையில் கண்ணீர்விட்டு அழுதேன்!" என்கிறார். அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள் அவரைப் பாதித்துவிட்டனவாம். ஆம், சத்தியமூர்த்தி, பாரதி, மோகினி ஆகிய பாத்திரங்களை மறக்கமுடியுமா என்ன! கவியரசு வைரமுத்து தாம் இளைஞராக இருக்கும்போது நடிக்க விரும்பிய பாத்திரம் சத்தியமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு இப்படி இளைஞர்களுக்கு லட்சிய வேகம் ஊட்டும் நாவல்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு விடையை நீங்களே கண்டுபிடியுங்கள்.



© TamilOnline.com