ஜூலை 27, 2013 அன்று செல்வி. ராதிகா பாலேராவின் ஹிஸ்துந்தானி சங்கீத அரங்கேற்றம் சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரத்தில் நடைபெற்றது. இவரது குரு. திருமதி. கலா ராம்நாத் ஹிந்துஸ்தானி பாணி வயலின் வாசிப்பதில் நிபுணர்.
யமன் ராகத்தில் ஏகதாளத்துக்கு அமைந்த படா கயாலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் ராதிகா. அடுத்து, 'ரஸபரஸே பூந்தினயா' என்ற தீன்தாளில் அமைந்த பாடலுக்குள் நம்மை அழைத்துச் சென்றார். பின்னர் பக்திரசம் ததும்பும் துகாராமின் அபங்கம் ஒன்றை வெகு அழகாகப் பாடினார். அடுத்து ரூபக தாளத்தில் அமைந்த சாருகேசி ராகப் பண்ணை விஸ்தாரமாகப் பாட எடுத்துக் கொண்டார். கர்நாடக இசையில் பெரிதும் வழங்கிவரும் இந்த ராகத்தின் ஹிந்துஸ்தானி வடிவத்தை அவர் நன்கு வெளிக்கொணர்ந்தார். பண்டிட் ஜஸ்ராஜின் பைரவி ராக பஜனைப் பாடல் ஒன்றுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தபலாவில் கபீர் ஜீதாவும், ஹார்மோனியத்தில் மிமி பட்டசார்ஜியும் நன்கு ஒத்துழைத்தனர்.
அஷோக் சுப்ரமணியம், சன்னிவேல், கலிஃபோர்னியா |