தெற்காசிய கிறிஸ்துமஸ் சேர்ந்திசை
டிசம்பர் 18, 2005 அன்று புனித யோவான் தமிழ் லூதரன் சர்ச் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நியூயார்க்கில் உள்ள விலிஸ்டன் பார்க்கில் (Williston Park, New York) தொடங்கியது. சேர்ந்தும் தனித்தும் இதில் பாடினர். பல சிறுவர் நாடகங்களும் இடம்பெற்றன. நியூ இங்கிலாந்து, யாங்க்கர்ஸ், ஸ்டேட்டன் தீவு ஆகியவற்றின் தெற்காசியப் பாதிரி சபைகள் இந்த இனிய நிகழ்ச்சியில் பங்கேற்றன.

தொழுதகு டாக்டர் ஈ.ஜே. ரத்தினசாமி மற்றும் பாஸ்டர் சாம் லஸாரஸ¤ம் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தினர். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விவிலியம் வாசிக்கப்பட்டது.

இடையிடையே சேர்ந்திசைப் பாடல்கள் ஒலித்தன. புனித யோவான் சபை ஞாயிற்றுப் பள்ளிக் குழந்தைகளின் நடிப்பில் மாகி டானியல் இயக்கி வழங்கிய 'பொம்மை சேகரிப்பவர்' (Toy Collector) என்ற நாடகம் நன்றாக இருந்தது. ஸெமினேரியன் பிரபாகரன், திவாகர், உஜ்வலா மோசஸ், சம்பந்தன் ஸைமன், சாந்தி, ரவிகுமார் ஜான்சன் மற்றும் அருணா குமரேசன் ஆகியோர் பாடிய துதிப் பாடல்கள் நெஞ்சத்தை அள்ளின.

அகில இந்திய ரேடியோ பாடகர் அனுராக வின்ஸென்ட் பாடல்களுடன் வழங்கிய சாட்சியம் அற்புதம்.

International Trachoma Initiative-இன் தலைவர் டாக்டர். ஜேகப் குமரேசன் அன்று மாலை கூட்டத்தினை நடத்தினார். பின்னர் டாக்டர். ரவி ஜான்ஸன் நன்றி கூறினார். புனித யோவான் லூதரன் தேவாலய மகளிர் சங்கம் இரவு விருந்தை அளித்தது.

ஆங்கிலத்தில்: ஜேன் கோண்டா
தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com